வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel

பாலியல் தொழிலை அழிக்க இந்தோனேசியா அரசு கடும் முயற்சி

பாலியல் தொழிலை அழிக்க இந்தோனேசியா அரசு கடும் முயற்சி

இந்தோனேசியாவில் பாலியல் தொழிலை அழிக்க அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 
உலக அளவில், இந்தோனேசியாவில் பாலியல் தொழில் புகழ் பெற்றது ஆகும். இதனால், இந்த பாலியல் தொழிலை வரும் 2019 ஆம் ஆண்டிற்குள் அழிக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் ஜகார்த்தாவில், கலிஜோடோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களில் பல ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்தோனேசியாவில் உள்ள நூற்றுக்கணக்கான பாலியல் விடுதிகளை அழிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவில், கலிஜோடோ பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒரு வார காலத்தில் தங்களது வசிப்பிடங்களைக் காலி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள குறைந்த விலைக் கட்டடங்களில் குடியேற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.