200 ஆண்டு பழமையான அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து

museum
Last Modified திங்கள், 3 செப்டம்பர் 2018 (10:24 IST)
பிரேசிலில் 200 ஆண்டுகள பழமை வாய்ந்த தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான வரலாற்று நினைவுகள் எரிந்து சாம்பலாகின.
பிரேசிலில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் அந்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் நேற்று அருங்காட்சியகம் மூடியதற்கு பின்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. 
 
இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :