வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:31 IST)

லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்ட 13 ஆயிரம் அலுவர்களுக்கு தண்டனை வழங்குகிறது சீனா

சீனாவில் கடந்த 9 மாதங்களில் லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்ட 13 ஆயிரம் அலுவலர்களுக்கு தண்டனை வழங்குகிறது.
 
சீனா அரசு அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட லஞ்ச நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது.
 
இதன் தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களில் 21 ஆயிரத்து 652 அலுவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் 13 ஆயிரத்து 414 அலுவலர்கள் லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது. அவர்களுக்கு சீன அரசு கடும் தண்டனை வழங்கவிருக்கிறது.
 
மேயர் மற்றும் அதற்கு மேல் அதிகாரிகளாக உள்ள 319 பேர் உட்பட நாடு முழுவதும் 35 ஆயிரத்து 633 அலுவலர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.