Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த வயதிலும்..இப்படி முடி..டொனால்டு டிரம்ப் என்ன செய்கிறார் தெரியுமா?


Murugan| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (15:48 IST)
அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்பின் தலை முடி பற்றிய ரகசியம் வெளியாகியுள்ளது.

 

 
பரபரப்பான, அதிரடியான அறிவிப்புகள் மூலம் தன்னை உலகமே உற்று நோக்க வேண்டும் என டிரம்ப் செயல்பட்டாலும், அவரின் அஷ்ட கோணலான முகபாவனைகள் மற்றும் அவரின் நீளமான, காற்றில் பறக்கிற தலைமுடி ஆகியவை அமெரிக்காவில் மிகவும் பிரபலம்.
 
70 வயதிலும் இவருக்கு தலைமுடி எப்படி இவ்வளவு நீளமாகவும், அடர்த்தியாகவும், கொட்டாமலும் இருக்கிறது?. அது உண்மையான தலைமுடிதானா? என பலருக்கு சந்தேகம் உண்டு. 
 
இந்நிலையில், அவரது தலைமுடி பற்றிய ரகசியத்தை அவரது குடும்ப மருத்துவர் ஹரோல்டு பார்ன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். அடர்த்தியான தலைமுடியை பெற டிரம்ப் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
 
தலைமுடிக்கு மட்டுமல்ல, இருதய நோய், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் தடுக்கவும் அவர் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். தலைமுடிக்கு ‘பினாஸ் டெரிட்’ மாத்திரையும், மாரடைப்பை தடுக்க பேபி ஆஸ்பிரின் மருந்துகளையும் டிரம்ப் உண்பதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :