Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

18 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரியை சுமர்ந்த நபர்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (11:10 IST)
வியட்நாம் நாட்டில் ஒருவரது வயிற்றில் 18 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

 
 
வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் மா வேன் நாட். இவருக்கு 54 வயதாகிறது. இவருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு விபத்து ஒன்று நேர்ந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
ஆனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது தவறுதாலாக அவரது வயிற்றில் கத்தரிக்கொலை வைத்துத் தைத்துவிட்டனர்.
 
இந்நிலையில் 18 ஆண்டுகளாக வயிற்றுவலியால் துடித்து வந்த நாட், மீண்டும் அதே மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். 
 
அப்போது அறுவை சிகிச்சைக்கு கத்திரிகோல் ஒன்று அவரது வயிற்றில் இருப்பது தெரிய வந்தது. உடனே, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த கத்தரிகோலை அகற்றியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :