வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜனவரி 2018 (16:40 IST)

மனித குளோனிங் விதையை அறிமுகப்படுத்திய சீன விஞ்ஞானிகள்

சீன விஞ்ஞானிகள் பாலூட்டி இனங்களில் ஒன்றாக குரங்குகளை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர்.

 
வியக்க வைக்கும் அறிவியல் நுட்பத்தின் ஒன்றான குளோனிங் முறையை முதன்முதலில் விஞ்ஞானிகள் அறிவித்தபோது உலக நாடுகளில் பல விவாதங்கள் நடந்தது. 1977ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறி ஆடுதான் முதன்முதலாக குளோனிங் செய்யப்பட்ட இனம். 
 
ஆனால் அந்த டாலி அதன் ஆயுட்கால்ம் முடியும் முன்பே இறந்து போனது. இதையடுத்து நாய், பன்றி, பூனை, எலி, என 20க்கும் மேற்பட்ட விலங்குகள் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது குரங்கு குளோனிங் செய்யப்பட்டுள்ளது மீண்டும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாலூட்டி இனங்களில் சிறப்பு தன்மை கொண்ட விலங்கின பிரிவு இந்த பிரைமேட்டுகள். பொதுவாக பிரைமேட்டுகள் பிரிவு விலங்கினம் மரங்களில் தங்கி வாழும் தன்மை கொண்டது. இதற்கு முன் எந்த பிரைமேட்டுகளும் வெற்றிக்கரமாக குளோனிங் செய்யப்படவில்லை.
 
கடந்த புதன்கிழமை வெளியான செய்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குளோனிங் செய்யப்பட்டது இல்லை. மனித இனிமும் பிரைமேட்டுகள்தான். இதனால் அடுத்து மனிதனை குளோனிங் செய்யும் ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
குளோனிங் செய்யப்பட்ட மகாக் வகை குரங்குகளின் பெயர் சோங் சோங் மற்றும் ஹுவா ஹுவா. இவற்றின் வயது 8 மற்றும் 6 வாரங்கள்.