வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By ashok
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:43 IST)

கழிவறைக்குச் செல்ல மாணவர்களிடம் மருத்துவர் கடிதம் கேட்கும் பள்ளி நிர்வாகம்

பிரிட்டன், வேல்ஸ் நாட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் வகுப்பு நேரத்தில் கழிவறைக்குச் செல்ல மருத்துவரிடம் இருந்து கடிதம் வாங்கி வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இயங்கிவரும் தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.அதில் தங்களது குழந்தை பாட வேளையில் கழிவறைக்குச் செல்ல வேண்டுமானால் பள்ளி நிர்வாகத்திற்க்கு மருத்துவர் மூலம் கடிதம் பெற்று தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தொலைபேசிக்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளனர். மேலும் மருத்தவர் கடிதம் கொண்டுவரும் பிள்ளைகளுக்கு ‘பாஸ்’ ஒன்று வழங்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை வைத்து மாணவர்கள் பாடம் நடத்தும் வேளையில் கழிவறைக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளனர்.

பள்ளியின் புதிய விதிமுறைக்கு பெற்றோர்களுக்கு கோபத்தையும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் அவசரத்துக்கு கழிப்பிடம் செல்லக்கூட மருத்துவரிடம் அனுமதிக் கடிதம் பெற வேண்டும் என்கிற பள்ளி நிர்வாகத்தின் விதிமுறை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பதில் அளித்த பள்ளி தலைமை ஆசிரியர், தங்களது நோக்கத்தை பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும், எங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் உடலில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டி இருக்கும். இந்த பிரச்சனை ஆசிரியர்கள் தெரிந்து கொள்வதற்காகவும். இதனை நாங்கள் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.