பாலைவன நாடுகளில் மணலுக்கு பஞ்சம்: உலக நாடுகளில் இருந்து இறக்குமதி!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 13 செப்டம்பர் 2017 (21:48 IST)
உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக மணல் உள்ளது.

 
 
ஆண்டுதோறும் 40 பில்லியன் டன்கள் அளவுக்கு மணல் தோண்டப்படுகிரது. மணலுக்காக உலக அளவில் 70 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடை பெருகிறது.
 
இந்நிலையில், மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாய் உள்ளிட்ட சில நாடுகள் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதாக தெரியவந்துள்ளது.
 
பகுதிகள் நிறைந்த அரபு நாடுகள் மணலை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? என தோன்றலாம். பாலைவனங்களில் உள்ள மணல் அனைத்தும் மிருதுவாக உள்ளதால் கட்டுமான பணிகளுக்கு அது பயன்படுவதில்லை.
 
எனவே, ஆஸ்திரேலியா போன்ற மற்ற உலக நாடுகளிடம் இருந்து சுமார் 456 பில்லியன் டாலர்கள் அளவிலான மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :