1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (18:54 IST)

அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார் சவுதி மன்னர்

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
கடந்த ஜனவரியில் முடிசூடிய பின்னர் மன்னர் சல்மான் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவே.
 
நெருங்கிய கூட்டாளி நாடுகளான சவுதியும் அமெரிக்காவும் பல்வேறு காரணங்களால் சிக்கலாகியுள்ள இருதரப்பு உறவுகளை சரிசெய்ய விரும்புவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
 
இரானுடனான அண்மைய அணு ஒப்பந்தம் தொடர்பில் வளைகுடா நாடுகளுக்கு உள்ள கவலைகள் தொடர்பில் மன்னர் சல்மான் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இரான் மீதான தடைகளை தளர்த்துவது, மத்திய கிழக்கில் தற்போது மோதல்களில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழுக்களுக்கு அந்நாடு உதவிகளை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சவுதி உள்ளிட்ட நாடுகள் அஞ்சுகின்றன.
 
இதனிடையே, யேமனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கு சவுதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
யேமனில் இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.