Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஈரான் மீது போர் தொடுப்போம்: சவுதி எச்சரிக்கை!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 8 நவம்பர் 2017 (21:10 IST)
உள்நாட்டு போர் காரணமாக ஈரான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
 
ஏமன் நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 
 
அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. ஹவுத்தி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
 
இதனால் ஈரன் மற்றும் சவுதி அரேபியா இடையே ஏவுகணை தாக்குதல் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டது. 
 
இது தொடர்பாக சவுதி அரேபிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரிடம் ஏவுகணை தொழில்நுட்பம் கிடையாது. ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சியில் ஈரான் ராணுவம் பின்னணியில் இருக்கிறது. 
 
இதனை சவுதி மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம். அதன்படி ஈரான் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :