1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (12:08 IST)

போராளிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்த விமானிகள்

ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்த சவுதி அரேபிய விமானிகள் மறுத்து வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய வான் வழித் தாக்குதலில் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அல்-பாக்தாதி பேசிய டேப் வெளியானது. மேலும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்யப்படும்படியான தகவல்களும் வெளியாகின.
 
அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்த  மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட துருப்புகள் அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளும் இணைந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மீது வான் வழி தாக்குதல் நடத்த சவுதி அரேபிய விமானிகள் மறுத்துவருவதாக சமூக வளைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஈராக்கின் அரசியல் நிபுணர்களும், பத்திரிகையாளர்கலும் உறுதிபடுத்துகின்றனர். இத்தகைய தாக்குதல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எண்ணுகின்றனர்.
 
இது குறித்து, சாஜத் ஜியாத் என்ற ஈராக் அரசியல் ஆய்வாளர் தனது டுவிட்டர் தளத்தில், 'சவுதி விமானிகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்து வருவது உண்மை தான்' எனக் கூறியுள்ளார்.