Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ரோபோ!

Robot
Last Updated: செவ்வாய், 28 நவம்பர் 2017 (19:26 IST)
சவுதி அரேபியா குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.


 
சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற ரோபோ சோபியா குடும்பம்தான் மிகவும் முக்கியமான விஷயம் என தெரிவித்துள்ளது. சோபியா, மனிதர்களின் முக பாவனைகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புரிந்துக்கொண்டாலும் ரோபோவிற்கு உணர்வுகள் கிடையாது.
 
கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சோபியா ரோபா, குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது. சொந்த ரத்த வகையைத் தாண்டியும் மக்களால் தங்களுக்கு ஏற்ற உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று.
 
உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் மனிதர்களும், ரோபோக்களுக்கு ஒரே மாதிரியானவர்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், சோபியாவிடம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்ற கேட்டதற்கு சோபியா என ரோபோ கூறியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :