வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 30 ஆகஸ்ட் 2014 (13:43 IST)

ரஷ்யாவுடன் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும்: புடீன் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மற்ற நாடுகளுடன் சண்டையில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை. ஆனால், தங்களிடம் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும்.

ரஷ்ய ராணுவப் படை நவீன தொழில் நுட்பங்களுடன் வலிமை பெற்று வருகிறது. ராணுவ வலிமையில் தனது அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது“  எள்று விளாதிமிர் புடீன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைன் மக்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பபி உக்ரைன் அசுக்கு எதிராகப் போராடி வருவகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிடட்ட ஏகாதிபத்திய நாடுகள் ரஷ்யாவிக்கு எதிராக, ஐரேப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.