Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீனாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:26 IST)
சீனாவில் ஏற்பட்ட கடும் காற்று மாசுபாடு காரணமாக, அங்கு பொதுமக்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கடும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. பெய்ஜிங் உள்ளிட்ட வடக்கு மற்றும் மத்திய சீனாவில் அதிகளவில் காற்று மாசுபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
பெய்ஜிங் உள்ளிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :