இந்தியா வறட்சி அடையக் காரணம் இந்த நாடுகள் - அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கடந்த பல வருடங்களாக மழை பொழியாமல் போனதற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகையே காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, இது குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் பெய்த மழையில் சல்பர் -டை-ஆக்சைடு 40 சதவீதம் கலந்திருப்பது தெரிய வந்தது.
காற்றை மாசுப்படுத்தும் அபாயகராமன வேதிப்பொருள் எப்படி காற்றில் கலந்தது என அவர்கள் அறிய முயன்ற போது, ஐரோப்பா கண்டத்தில் உள்ள வட மேற்கு மற்றும் தென் மேற்கு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நிலக்கரி புகையில் சல்பர்-டை-ஆக்சைடு அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்தது.
இவை ஆவியாக மேலே சென்று, மழை பொழியும் போது பூமிக்கு வருகிறது. இதனால், பயிர்கள் மட்டுமில்லாமல் மனிதர்களுக்கு இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தி மரம், செடி, கொடிகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கின்றன. அதில் உள்ள சல்பேட் துகள்கள் சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப விடுகின்றன. இதனால், புவியின் வட துருவத்தில் உள்ள வெப்பம் முழுவதும் தென் துருவத்திற்கு அனுப்பப்படுகிறது. இது பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதான் இந்தியாவில் வறட்சியை ஏற்படுத்தி வருகிறது.
1990ம் ஆண்டிலிருந்து 2011 வரை மட்டுமே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து 74 சதவீத சல்பர்-டை-ஆக்ஸைடு வெளியாகியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் 13 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, வட இந்தியாவில் வசிக்கும் மக்கள்தான் இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.