வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (02:02 IST)

ஜூலை 31 ஆம் தேதி: வானில் அதிசய புளூ மூன்

வானில் ஒரே மாதத்தில் இரண்டு பெளர்ணமி தோன்றும் அரிய நிகழ்வான புளூ மூன் என்ற நிகழ்வு நாளை (ஜூலை 31ஆம் தேதி) நடைபெறுகிறது.
 

 
வருடத்தில், 12 மாதங்கள். இதில், ஒரு மாதத்தில் ஒரு பவுர்ணமி தான் வரும். இதுதான் இயற்கை. ஆனால், சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி வரும்.
இதை வானில், மிக அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுவர்.
 
ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி வரும் தருணத்தை புளூ மூன் என்று விஞ்ஞானிகளால் பெருமையுடன் அழைக்கப்படும்.
 
கடந்த 2ஆம் தேதி முழு பவுர்ணமி வந்தது. இந்த நிலையில், தர்போது, இந்த மாதத்தில், மீண்டும் நாளை 31ஆம் தேதி 2 ஆவது பவுர்ணமி வருகிறது. இந்த பவுர்ணமியின் போது, முழு நிலவாக தோன்றும். இது நீல நிலவு என்று அழைப்பார்கள்.
 
ஒரே மாதத்தில் 2 பெளர்ணமி வருவது, அதாவது நீல நிலவு வருவது அபூர்வமானது என்று ஹைதராபாத் பி.எம்.பிர்லா அறிவியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.