வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (16:56 IST)

தலையில் சுடப்பட்டு ரத்தம் வடிய செல்ஃபி வீடியோ போட்ட ராப் இசை கலைஞர் (வீடியோ)

ராப் இசை கலைஞர் டெரிக் ராயல் தலையில் சுடப்பட்ட நிலையில் ரத்தம் கொட்ட கொட்ட மருத்துவமனைக்கு செல்லாமல் செல்ஃபி வீடியோ எடுத்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தில் பதிவேற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தன்னுடைய தலையினுள் மூன்று தோட்ட துண்டுகள் இருக்கிறது. சுடப்பட்டு ரத்தம் முகத்தில் வழிந்தோடுகிறது. சுடப்பட்ட வலி இருக்கும் ஆனால் இதில் எதையும் பொருட்படுத்தாமல் அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நேரடியாக கேமிராவில் செல்ஃபி வீடியோ எடுத்து விபத்து குறித்து தனது ரசிகர்களுடன் அவர் பேசுகிறமாதிரி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தனது ஆதரவாளர்களுக்கு பதிவேறியுள்ளார்.

இவரின் இந்த தைரியமான மற்றும் தனது ரசிகர்களுடன் தனது வாழ்கையின் ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொள்ளும் செயலை பார்க்கும் போது சற்று வித்தியாசமாகவே உள்ளார் அவர்.