சீன அதிபர் வீட்டில் காத்திருந்த ரஷ்ய அதிபர் செய்த செயல்


Abimukatheesh| Last Updated: திங்கள், 15 மே 2017 (15:58 IST)
சீனாவில் புதிய பட்டு சாலை திட்டம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் இல்லத்தில் பியானோ வாசித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

 

 
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் புதிய பட்டு சாலை திட்ட மாநாடு நடந்தது. இதற்கான ஏற்பாட்டை சீனா செய்து இருந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார்.
 
மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை சீன அதிபர் தனது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பு கூட்டம் சற்று தாமதமானதால் சீன அதிபர் வீட்டில் இருந்த பியானோவை புதின் இசைத்தார். அவர் சோவியத் ரஷ்யா கால பாடலை இசைத்தார். அங்கிருந்த அனைவரும் அவரது இசையை ரசித்து மகிழ்ந்தனர்.
 
64 வயதான புதின் பன்முக தறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :