வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 4 டிசம்பர் 2014 (19:53 IST)

ஆசியாவின் கவர்சியான 50 பெண்கள்: பிரியங்கா சோப்ரா முதலிடம், ஐஸ்வர்யா ராய் 16 ஆவது இடம்

இங்கிலாந்தை சேர்ந்த வார பத்திரிகை ஒன்று ஆண்டு தோறும் ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்களை தேர்ந்து எடுத்து வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு காத்ரீனா கைஃப் உலகின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இந்த முறை அந்த இடத்தை 32 வயதான நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா தட்டி பறித்து உள்ளார்.
 
புகழ் பெற்ற டிவி  நடிகை தர்சிதி டாமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சானியா இரானி டிவி நடிகை 3 ஆவது இடத்தில் உள்ளார். கடந்த முறை முதல் இடத்தை பிடித்த காத்ரீனா கையூப் இந்த முறை 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


இது குறித்து பிரியங்கா சோப்ரா கூறும் போது, சிலர் என்னிடம் கூறினார்கள் கவர்ச்சி என்ன பெரிய கவர்ச்சி உங்களுக்கு என்ன சிறப்பாக தோன்றியதோ அதை  நீங்கள் செய்யுங்கள், நான் இந்த தகுதியை அடைய என்ன செய்தேன் என்று எனக்கு தெரியாது, ஆனால் மகிழ்ச்சியாக இந்த சிறப்பை ஏற்று கொள்கிறேன்.
 
நான்  மீண்டும் ஒருமுறை கவர்ச்சி பெண்ணாக தேர்ந்து எடுக்கப்பட்ட புகழில் மூழ்கி இருக்கிறேன். உலகம் முழுவதும்  பொது மக்கள் உண்மையாக வாக்களித்து இந்த முடிவை அறிவித்து உள்ளனர். இது என்னை இன்னும் சிறப்பு செய்கிறது, என்று கூறினார்.


இது குறித்து வார பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆசாத் நசீர் கூறும்போது,
 
இந்த முறை ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டுயலில் இந்தியாவின் முக்கியமான சர்வதேச ஐகான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். பிரியங்கா அழகான பெண்மணியாக இருந்தாலும் அவர் மனதும் மனிதாபிமான உதவிகள் செய்து அழகாக உள்ளது. 2014 ஆண்டுக்கான தர வரிசையை நிர்ணயிப்பதில் எங்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டது, அதிக அளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஓட்டுக்கள் பதிவானது. சோஷியல் மீடியா மூலமும் ஓட்டளித்து உள்ளனர். மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் ஓட்டளித்து உள்ளனர் என கூறினார்.


 
 
இந்த முறை ரியாலிட்டி டிவி நடிகைகள் இந்த பட்டியலில் பங்கெடுத்து உள்ளனர். ரியாலிட்டி டிவி நடிகை கவுர்கான் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இளம் நடிகை பிரீத்திகா ராவ் 10 ஆவது இடத்தையும், இந்திய டெலிவிஷன் நடிகை நியா ஷர்மா 7 ஆவது இடத்தையும், ஆஷா நிகி 12 ஆவது இடத்தையும் சக்தி மோகன் 13 ஆவது இடத்தையும், சுர்பி ஜோதி 16 ஆவது இடத்தையும், ஹினா கான் 23 ஆவது இடத்தையும், கிருத்திகா கம்ரா 30 ஆவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
 
அமெரிக்காவின் தொகுப்பாளர் மேலாண்மை நட்சத்திரம் நவ்ரீன் டி உல்ப் 15 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இவரது தாய் தந்தையர் புனேயில் பிறந்தவர்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஹூமைமா மாலிக் 20 ஆவது இடத்தையும், இங்கிலாந்தை சேர்ந்த டிவி ரியாலிட்டி நட்சத்திரம் ஜாஸ்மின் வாலியா 32 ஆவது இடத்தையும், பெற்றுள்ளனர்.
 
வயதானவர்களில் 47 வயதாகும் மாதுரி தீட்ஷித் 28 ஆவது இடத்தை பெற்றுள்ளார். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள், ஐஸ்வர்யா ராய் பச்சன் 16 ஆவது இடத்தையும், பிரினீதி சோப்ரா 18 ஆவது இடத்தையும், ராணீ முகரஜி 22 ஆவது இடத்தையும், இஷா குத்த்ரா 23 ஆவது இடத்தியும், தீபிகா படுகோனே 6 ஆவது இடத்தையும், சோனம் கபூர் 9 ஆவது இடத்தையும், சாரதா கபூர் 17 ஆவது இடத்தையும், அலியா பட் 24 ஆவது இடத்தையும், மகிரா கான் 34 ஆவது இடத்தையும், கங்கானா ரனாவத் 38 ஆவது இடத்தையும், அனுஷ்கா சர்மா 47 ஆவது இடத்தையும், கனிகா கபூர் 50 ஆவது இடத்தியும் பிடித்து உள்ளனர்.
 
ஆசியாவின் 50 கவர்ச்சிகரமான ஆண்களுக்கான பட்டியல் அடுத்த வாரம் வெளியாகும் என்று அவர் கூறினார்.