வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (13:05 IST)

விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியாருக்கு சிறை

விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்த கலிஃபோர்னிய பாதிரியார்க்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை அடுத்த பிலடெல்பியாவில் மார்செலோ டி ஜெசுமரிய என்ற கத்தோலிக்க பாதிரியார் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவருடன் பெண் மாடல் அழகி ஒருவரும் பயணம் செய்துள்ளார்.
 
இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த தன்னிடம் பாதிரியார் முறைகேடாக நடந்து கொண்டார் என்றும் தொட்டுக்கொண்டிருக்கும் போது தான் விழித்தெழுந்ததாக கூறியுள்ளார். இது குறித்து விமான வேலையாட்களிடம் எச்சரித்துவிட்டு பின்னர் ஒரு FBI ஏஜெண்டிடம் கூறியுள்ளார்.
 
விசாரணியின் ஆரம்பத்தில், பாதிரியார் தான் விமானத்தில் பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததையும், இருக்கை மற்றி கேட்டதையும் மறுத்துள்ளார். பின்னர் இறுதியில், குற்றத்தை ஒத்துக்கொண்டதோடு, தண்டனையை குறைக்குமாறும் கேட்டுள்ளார். ஆனால் அரசு தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 
பாதிரியார் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், ‘அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் மேலும் அவருக்கு சமூகத்தில் நல்ல மறியாதை உள்ளவர் என்றும், இதன் மூலம் அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பாலியல் குற்றவாளி என கருதப்படுவார்’ என்றும் கூறினார்.
 
ஆனால் அந்த பெண் அவரின் மனைவி தான் என்று விமான பணிப்பெண் கூறியுள்ளார். இவர் சான் பெர்னார்டினோ மறைமாவட்டத்தில் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பிறகு அவர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளர்.