1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (17:40 IST)

குளு குளு அறைகள், துப்பாக்கிகளுடன் சொகுசாக வாழ்ந்த ராம்பால் - காவல் துறையினர் வியப்பு

ஹரியானாவில் கொலை வழக்கில் கைதான சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் துப்பாக்கிகள் மற்றும் குளு குளு அறைகளைக் கண்டு காவல் துறையினர் ஆச்சர்யமும் வியப்பும் அடைந்துள்ளனர்.
 
ஹரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
 
இதற்கிடையில், ஹரியானா மாநில சாமியார் ராம்பாலை கைது செய்ய காவல்துறையினர் சென்றுள்ளனர். சண்டிகார் மாநிலத் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 12 ஏக்கர் பரப்பளவில் அவரது ஆசிரமத்திற்குள் நுழைந்தபோது அதன் சுற்றுச் சுவரையும், அங்குப் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரங்களையுமே பார்த்து மிரண்டுள்ளனர்.
 

 
மேலும் அந்த ஆசிரமத்திற்குள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையிலான பிரமாண்டமான முற்றிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வழிபாட்டு அரங்கமும் அதன் நடுவில் பெரிய மேடையும், அந்த அரங்கினுள் சாமியார் பேசுவது திரையில் தெரியும் வண்ணம் 3டி திரை வசதியும் உள்ளது.
 
சாமியார் தங்குவதற்கு நட்சத்திர விடுதியைப் போன்று குளு குளு அறைகளும் அதனுடன் கூடிய இணைப்பு குளியலறைகளும், உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய மிகப் பெரிய நீச்சல் குளமும் இருந்துள்ளது.
 
இது தவிர, ஏராளமான சமையல் பொருட்களுடன் சமையல் அறையும், அதில் மின்சார சமையல் சாதனங்களும் இருந்துள்ளன. நவீன வசதி கொண்ட மருத்துவமனை ஒன்றும் உள்ளது.
 

 
ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஏராளமான துப்பாக்கிகளும், ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்ததுள்ளது. மேலும், சாமியாருக்கு என்று சிறப்புப் பாதுகாப்புக் கமாண்டோக்கள் அளிக்கப்பட்டு இருந்திருக்கிறது.
 
இது காவல் துறையினருக்கு ஆச்சர்யத்தையும், வியப்பையும் அளித்துள்ளது.