வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 19 நவம்பர் 2014 (13:09 IST)

கர்ப்பிணி மனைவி உட்பட 7 பேரை கொடூரமாகக் கொலை செய்த 80 வயது முதியவரைத் திருமணம் செய்யும் இளம்பெண்

அமெரிக்காவில் தனது கர்ப்பிணி மனைவி உட்பட 7 பேரை கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 80 வயது முதியவரை இளம் பெண் ஒருவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடையவர் சார்லஸ் மேன்சன். இவர் கடந்த 1969ஆம் ஆண்டு தனது கர்ப்பிணி மனைவி ஷரோன் டேட் உட்பட 7 பேரை கொடூரமாகக் கொலை செய்தார். இந்த குற்றத்துக்காக அவர் தனது ஆயுளை சிறையில் கழித்து வருகிறார்.
 
இந்நிலையில், சிறையிலேயே பல ஆண்டுகளாக இருக்கும் சார்லஸ் மேன்சனை அடிக்கடி சந்தித்து வந்த சூப்டன் எலைன்ஸ் பர்டான் என்ற 26 வயது இப்பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.
 
இதையடுத்து இருவரும் கலிபோர்னியா மறுவாழ்வு சீர்திருத்த துறையில் அனுமதி பெற்று விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.