செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (06:51 IST)

இணையத்தில் வெளியானது பாப் பாடகர் ஜஸ்டீன் பீபரின் நிர்வாணப் புகைப்படம்

பிரபல பாப் பாடகர் ஜஸ்டீன் பீபரின் நிர்வாணப் புகைப் படங்கள்   இணையத்தளத்தில் வெளியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
பிரபல  இணையதளம் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத் தொகுப்பில், 20 படங்களை கொண்ட ஒரு ஆல்பத்தில்  பாடகர் ஜஸ்டீன் பீபர் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை போன்ற படங்கள் வெளியாகி உள்ளன.
 
இது குறித்து அறிந்த  ஜஸ்டீன் பீபர், அந்த இணையத் தளத்திற்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.மேலும் இணையத் தளத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஜஸ்டீன் பீபர்,12 மணி நேரத்திற்குள் அனைத்து புகைப்படங்களையும் நீக்க வேண்டும்,அதுமட்டுமல்லாது பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.