வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2015 (18:53 IST)

ஜெர்மனியில் அகதிகள் முகாமில் மோதல்: 3 பேர் படுகாயம்

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள முகாமில் அகதிகள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பலர் கைது செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

 
 
பெர்லினில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக் கிழமை உணவு இடைவேளையின் போது மோதல் ஏற்பட்டுள்ளது, இதில் மூன்று அகதிகள் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் 830 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு அங்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
ஞாயிறன்று பெர்லினின் ஸ்பான்டாவு மாவட்டத்தில் உள்ள மற்றொரு முகாமிலும் இதே போல் கலவரம் ஏற்பட்டதாகவும், அப்போது முகாமில் இருந்த அறைகளின் ஜன்னல்கள் மற்றும் மரச்சாமான்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஒரே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், இன ரீதியான மோதல்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.