1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (15:12 IST)

புளூட்டோவில் பனி மலைகள்: நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம்

புளூட்டோ கிரகத்தில் உள்ள பனி மலைகளை நாசா விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.


 

 
அமெரிக்காவின் "நாசா" விண்வெளி மையம் "நியூ ஹொரைசான்" என்ற விண்கலத்தை புளூட்டோ கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பியுள்ளது.
 
அந்த விண்கலம் தற்போது அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அத்தடன் புளூட்டோ கிரகத்தை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
 
சமீபத்தில் அந்த வின்கலம் அனுப்யுள்ள புகைப்படங்களில் அங்கு உறைந்த நிலையில் பனி மலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.


 

 
அந்த உறைபனி மலைகள் அடுக்கடுக்காக பல கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளன.
 
அந்த மலைகளுக்கு "ஸ்புட்னிக் பிளானம்" என்று விஞ்ஞானிகள் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.