வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (11:08 IST)

மாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு!!

உலகின் ஏராளமான பகுதிகள் மர்மத்தின் புதையலாக உள்ளது. அவற்றில் ஓன்று தான் மனிதர்களை கொள்ளும் என்வைடேனேட்  தீவு.


 
 
என்வைடேனேட்  தீவில் பெரிய எரியும், குட்டி குட்டி தீவுகளும் இருக்கின்றன. இது கென்யாவில் துர்கான ஏரி அருகே உள்ளது. துர்கான ஏரி முற்காலத்தில் ரொடால்க் என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 6௦௦௦ சதுர கிமீ இருக்கும். 
 
கி.பி.1888 ஆம் ஆண்டு ஆஸ்திரியா ஆய்வாளர் கொவ்டர்பால் டெலிகி என்பவர் இந்த ஏரியை கண்டுபிடித்தார் என வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஏரியை சுற்றி எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன. 
 
முன்பு ஒரு காலத்தில் இந்த தீவில் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு தீவில் இருந்த மக்கள் குறைய துவங்கினர். அந்த தீவை பார்க்க சென்ற பக்கத்து தீவு மக்களும் இன்று வரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.
 
1935 ஆம் ஆண்டு விவியம் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவுக்கு ஆய்வுகள் மேற்கொண்டார். நாட்கள் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பி வரவில்லை. 
 
ஹெலிகாப்டரில் பரந்த படி இந்த தீவை நோட்டம் விட்டனர். அப்போது அங்கு பழங்குடியினர் குடிசைகள் கணப்பட்டதே தவிர மனித நடமாட்டம் இல்லை. 
 
அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஓன்று வரும் அந்த நிலத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்பது மக்கள் கூறும் காரணமாக உள்ளது. ஆனால் இதன் பின் இருக்கும் உண்மையான மர்மம் இன்னும் வெளியே வரவில்லை.