1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 8 ஜூலை 2017 (15:33 IST)

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகளை உருவாக்கி சீனா உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


 
 
உலக நாடுகள் ஒன்றினைந்து எரிசக்திக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் 2040-ல் பெட்ரோ, டீசல் வாகனங்களை தடை செய்ய போவதாக அறிவித்தது.
 
இந்நிலையில் சீனாவின் டேடாங் என்ற இடத்தில் சோலார் பேனல்களை பாண்டா வடிவில் பிரம்மாண்டமான முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
பாண்டாவின் கருப்பு பகுதிகள் மோனோகிரிஸ்டலின் சிலிகான் சோலார் தகடுகளாலும், வெள்ளை மற்றும் க்ரே பகுதிகள் மெல்லிய ப்லிம் சோலார் தகடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. 
 
இந்த சோலார் தகடுகள் மூலம், 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது. வருங்காலங்களில் மேலும் பல பகுதிகளில் பாண்டா வடிவ சோலார் தகடுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.