செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 25 மே 2016 (03:19 IST)

ஸ்பைடர்மேன் ஆன பாலஸ்தீன சிறுவன்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன்னுடைய அசாதாரணமான செயல்களால் ‘ஸ்பைடர்மேன்’ என்று அழைக்கப்படுகிறார்.


 

 
முகமது அல் ஷேக்(12), 4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர். இவர் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குத் தன்னுடைய கை, கால்கள், உடலை வளைக்கிறார், கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார், உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார், ஒரு கையால் நிற்கிறார்.
 
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே இவரின் தற்போதைய லட்சியம். 2014-ம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதல்களில் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்கள் நடைபெற்று 50 நாட்களில் முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
 
என் திறமைகளை உலகம் முழுவதும் சென்று வெளிப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் எல்லா எல்லைகளும் எங்களுக்கு மூடப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் உள்ள அரபு மக்கள் இணையம், ஃபேஸ்புக் மூலம் வீடியோக்களைப் பார்த்துதான் எனக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள், என்று முகமது அல் ஷேக் கூறியுள்ளான்.