புகைப்படத்தால் வைரலாகி; அதே புகைப்படத்தால் வசமாய் சிக்கிய பாகிஸ்தான் டீக்கடைகாரர்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (21:11 IST)
ஒரு புகைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடைகாரர் அர்ஷத் கான் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

 
 
சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி இவருக்கு மாடல் ஆகும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அவர் தற்போது வைரலான காரணத்தினால் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
 
இவர் உண்மையில் பாகிஸ்தானை சேர்ந்தவர் அல்ல, ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என இவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையை அர்ஷத் கான் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுள்ளது.
 
ஆனால் அர்ஷத் கான் இதனை மறுத்துள்ளார். அவரது தந்தை பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :