வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By murugan
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:36 IST)

போரைத் திணித்தால் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ஆணவப் பேச்சு

பாகிஸ்தான் மீது இந்தியா போரைத் திணித்தால், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுக்க தயாரக இருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கூறினார்.

சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம், எல்லை தாண்டி வந்து காஷ்மீர் பகுதியில் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல், மற்றும் ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த இந்திய ராணுவ தளபதி ஜெனரல் தல்பிர் சிங் இந்திய பாகிஸ்தான் இடையே குறுகிய கால போர் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு இந்திய தயாரக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து  வானொலியில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் முகமது ஆசிப் “பாகிஸ்தான்அமைதியையே விரும்புகிறது. ஆனால், இந்தியா எங்கள் மீது குறுகிய கால போரையோ, நீண்ட கால போரையோ திணித்தால் அதற்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்கிறது. பகிஸ்தான் இந்தியாவுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கும்.

1965ஆம் ஆண்டு லாஹூரை ஆக்கிரமித்ததை தொடந்த்து நடந்த போரிலேயே இந்தியாவின் திட்டங்களை பாகிஸ்தான் முறியடித்தது. 50 வருடங்களுக்கு முன் இருந்தது போல் இல்லாமல் இப்போது நிறைய அனுபவமும் பெற்றிருக்கிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். எனவே, எத்தகைய சவால்களுக்கும் எப்படி பதிலடி கொடுப்பது என்று எங்களுக்கு தெரியும். நாட்டை காப்பாற்ற எந்த தியாகமும் செய்ய தயங்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.