வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (10:59 IST)

திருநங்கைளுக்காக தனிப்பள்ளியை தொடங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவருக்காக தனி பள்ளி தொடங்கப்பட்ட விவகாரம் அனைத்து தராப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. 
திருநங்கைகள் சமூகத்தில் பல்வேறு அவலங்களை தந்தித்து வருகின்றனர். வீட்டில் ஒதுக்கி வைப்பது, சமூகத்தில் ஒதுக்கி வைப்பது, வேலையின்மை, கல்வியின்மை என எல்லா பக்கமும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் தப்பான வழிக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் பிச்சை எடுத்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் பாகிஸ்தானில்  முதல் முறையாக திருநங்கைகளுக்காக  பள்ளியை தனியார் தொண்டு நிறுவனம், ராணுவ குடியிருப்பு பகுதியில் தொடங்கியுள்ளது. இப்பள்ளியில் தற்பொழுது 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இப்பள்ளியில் ஒன்றிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலலாம். மேலும் சமையல், பேஷன் டிசைனிங், காஸ்மெடிக்ஸ் உள்ளிட்ட 8 துறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.