பாகிஸ்தான் தூதர் கைது எதிரொலி : இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு

பாகிஸ்தான் தூதர் கைது எதிரொலி : இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு


Murugan| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (09:27 IST)
இந்தியாவை உளவு பார்த்த பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரி மீதி எடுத்த நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்க, இந்திய தூதரக அதிகாரி 48 மணி நேரத்தில் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும்  முகமத் அக்தர் என்பவர் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததை, மத்திய உளவுத்துறை சமீபத்தில் கண்டுபிடித்தது. இதனால் அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் இந்தியாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.  
 
இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரியான சுர்ஜீத் சிங் என்பவரை விரும்பத்தகாதவர் என்று அறிவித்து, 48 மணி நேரத்திற்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :