வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2014 (17:29 IST)

’எங்களது இதயம் வலித்துவிட்டது’ - பெஷாவர் தாக்குதல் குறித்து அல்-கொய்தா

பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாத இயக்கம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 'எங்களது இதயம் வலியால் வெடித்துவிட்டது' என்று அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு கூறியுள்ளது.
 
பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16ஆம் தேதி புகுந்து, தலைமையாசிரியர், 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன. இந்நிலையில் உலகின் மற்றொரு பயங்கரவாத அமைப்பாக உள்ள அல்-கொய்தா பெஷாவர் பள்ளி மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
 
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா மெக்மூத் பேசுகையில், "பெஷாவர் தாக்குதலால் எங்களது இதயம் வலி மற்றும் வருத்தத்தால் வெடித்துவிட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றம் மற்றும் கொடூமைகள் எல்லைத் தாண்டிவிட்டது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
 
ராணுவம் அமெரிக்காவிற்கு அடிமையாக செல்கிறது, முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால்  அதற்காக நாம் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை பழிவாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
 
நாம், அல்லாவின் எதிரியான அமெரிக்கா, அமெரிக்காவின் சொல்லாட்சியார்கள் மற்றும் அடிமை ராணுவத்திற்கு எதிராக துப்பாக்கி ஏந்த வேண்டும், குழந்தைகள் மற்றும் நமது முஸ்லீம் மக்கள் இலக்காக கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.