வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (15:47 IST)

நேபாளத்தில் பெரிய ரக விமானங்கள் தரையிறங்க முடியாது

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் பெரிய ரக விமானங்கள் அந்நாட்டின் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 


விமானநிலையத்தின் ஓடுதளத்தில் வெடிப்புகள் தென்பட்டதை அடுத்தே பெரிய ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சிறிய ரக விமானங்களை தொடர்ந்தும் தரையிறக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காவிட்டால் காத்மண்டு விமானநிலையத்தை மூடவேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
நிலநடுக்கத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் இப்போது சென்றடைந்துள்ளனர்.
 
இந்தப் பகுதிகளில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்டடங்கள் அழிந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
உயிரிழந்துவிட்டார்கள் என்று தெரியவந்துள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது ஏழாயிரத்தைத் தாண்டிவிட்டது.
 
உயிரிழந்தவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.