பனிரெண்டு வயது சிறுமியை திருமணம் செய்த தாத்தா : வீடியோ


Murugan| Last Updated: புதன், 17 பிப்ரவரி 2016 (17:43 IST)
ஒரு பனிரெண்டு வயது சிறுமியுடன், ஒரு முதியவர் திருமண கோலத்தில் நின்றிருந்த விவகாரம் லெபனானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
லெபனானில் ஒரு கடற்கரை அருகில், ஒரு தாத்தா, தன்னுடைய பேத்தி வயதில் உள்ள் ஒரு சிறுமியுடன் திருமண கோலத்தில் நின்றிருந்தார். மணக்கோலத்தில் நின்றிருந்த அவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். 
 
அந்த வழியாக வந்தவர்கள் இதை கவனித்து, என்ன விஷயம் என்று அந்த புகைப்படம் எடுப்பவரை விசாரித்தனர். அதற்கு அவர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
 
இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் இது குற்றம் என்று கண்டித்தனர். அதற்கு அந்த தாத்தா அவர்களிடம் சண்டைக்கு போனார். இந்த சிறுமியின் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கியே நான் திருமணம் செய்துள்ளேன் என்று வாக்குவாதம் செய்தார். 
 
ஆனால் அது அத்தனையும் நாடகம் என்பது பிறகுதான் தெரியவந்தது. லெபனானில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பிரச்சார வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் வயதான ஆண்கள் சிறுமிகளை திருமணம் செய்து வருகிறார்கள். 8 அல்லது 9 வயதுடைய  1.5 கோடி சிறுமிகள் வருடம் தோறும் இப்படி வயதான ஆண்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டு 12 கோடியாக உயரும் என ஐ.நா மக்கள் தொகை நிதியம் கூறியுள்ளது.
 
அந்த பிரச்சார வீடியோ உங்கள் பார்வைக்கு... 

 


இதில் மேலும் படிக்கவும் :