வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (11:53 IST)

அமெரிக்காவை மீட்டெடுத்த ஒபாமா: 8 ஆண்டு கால பயணம்!!

அதிபர் ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான நிலையை கொண்டிருக்கிறது. 


 
 
ஒபாமாவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு 4.6 சதவீதமாக குறைந்து உள்ளது. 
 
அதிபர் புஷ் ஆட்சி:
 
புஷ் ஆட்சியின் இறுதியில் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் பறிபோயின. 
 
உற்பத்தி துறை நிறுவனங்கள் மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மாறின. வீட்டுக் கடன் பிரச்சனைகளால் வங்கிகள் சரிவை சந்தித்து கொண்டிருந்தன. 
 
கார் உற்பத்தி நிறுவனங்களும் கடும் பின்னடைவைச் சந்தித்தன. இது தொடர்பான மற்ற துறைகளிலும் கடுமையான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது.
 
ஒபாமா ஆட்சி:
 
வங்கிகளுக்கும், கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஒபாமா அரசு உதவிக் கரம் நீட்டியதால், இரு துறைகளும் விரைவில் மீண்டு வந்தன. 
 
மேலும், மருத்துவம், கட்டுமானம், அரசு, வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 
 
ஒபாமாவின் மேலும் பல நடவடிக்கைகளால் பொருளாதார தேக்கத்திலிருந்து மீண்டு நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்தது. 
 
தற்போது வலுவான நிலையில் அமெரிக்க பொருளாதாரம் உள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
ஒபாமா விட்டுச்செல்லும் வலுவான பொருளாதார நிலையை டிரம்ப் வளப்படுத்துவாரா அல்லது எதிர்மறையாக மாறுமா என்பது  கேள்விக் குறியாக உள்ளது.