1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (17:15 IST)

நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு? மனம் திறக்கும் ஒபாமா

அமெரிக்க நாட்டின் அதிபராக பல உயர்ந்த முடிவுகளை எடுத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு என்னுடை.ய மனைவி மிச்சேலை எனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது தான் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். 


 

 
காதலர் தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல ஹாலிவுட் நடிகையும் தொகுப்பாளருமான எல்லென் டி ஜெனரெஸ் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பேட்டி எடுத்தார். அப்போது அவர் கூறுகையில், "காதலுக்கு பின்னால் காதலர்களுக்கு அமையும் திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவு இல்லாமல் கழிப்பதற்கு தேவையற்ற வாக்குவாதங்களை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

என்னுடைய மனைவி மிச்சேல் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியானதுதான் என்பதை 15 ஆண்டுகள் பின்னர் தான் புரிந்து கொண்டேன். அதன்பின்னர், எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதில்லை, 
 
திருமணத்திற்கு பின்னரும் மிச்சேலை நான் மிகவும் நேசிக்கிறேன், அமெரிக்காவின் அதிபராக பல உயர்ந்த முடிவுகளை எடுத்திருக்கிறேன் ஆனால், நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு மிச்சேலை என் வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது" என்று அவர் குறிப்பிட்டார்.