வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2016 (14:52 IST)

கியூபா நாட்டு அதிபருடன் கைகுலுக்க மறுத்து அவமதித்த ஒபாமா

1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் கியூபாவில் நடைபெற்றுவந்த ஆட்சியை பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்தது.


 


முதலாளித்துவ, தனியுடைமை உறவுகளுக்கு முடிகட்டியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை உள்ளிட்ட ஏராளமாக தடைகளை அமெரிக்கா விதித்தது. 
 
இரு வேறு பொருளதார, அரசியல் கொள்கைகளைக் கொண்ட இருநாடுகளுக்கும் இடையில் பகைமை நீடித்து வந்தது. இது பொதுவுடைமைக்கும் தனியுடைமைக்கும் இடையிலான போராட்டமாக நீடித்து வந்தது. அமெர்க்காவின் ஆதரவை கியூபா எதிர்பார்க்கவில்லை. அதற்கான அவசியம் அந்த நாட்டிற்கு ஏற்பட வில்லை.
 
இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்து அமெரிக்கா 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரத்தை திறந்தது.
 
இதை தொடர்ந்து ஒபாமா கியூபாவிற்குச் செல்வார் என்று பல மாதங்களாக கூறப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டு நாள் பயணமாக மார்ச் 20 ஆம் தேதி கியூபா தலைநகர் ஹவானா செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.
 
அதன்படி, ஒபாமா தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் கியூபாவிற்குச் சென்றார். விமான நிலையத்தில் ஒபாமாவை கியூபா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
 
இதைத் தொடர்ந்து, கியூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சியாருமான பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அந்நாட்டு அதிபராக இருந்த வருகிறார். பிடல் காஸ்ட்ரோ தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
 
ஒபாமா தற்போதைய கியூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
பின்னர், ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். வழக்கமாக இதுபோன்ற கூட்டுப் பேட்டிக்குப் பின்னர், இருநாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் கைகுலுக்கி, தங்களது கரங்களை உயர்த்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம்.
 
அதன்படி, ஒபாமாவின் கரங்களைப்பற்றி, கைகுலுக்கி மேலே உயர்த்த ரவுல் காஸ்ட்ரோ முனைந்தார். ஆனால், இதை தவிர்த்த ஒபாமா, தனது கரத்தை காஸ்ட்ரோவின் பிடியில் இருந்து விலக்கினார். 
 
அப்போது, அரைகுறையாக தனது கையை உயர்த்திய ஒபாமா, நிருபர்களை பார்த்து ஒரு அசட்டுசிரிப்பு சிரித்தவாறு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
 
ஒபாமாவின் இந்த செயல் உலக மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் இல்லை என்றால் போகாமல் இருந்திருக்கலாம். அங்கு செல்ல வேண்டும் என்று விரும்பியவர் ஒபாமாதான் ஆனால், அங்கு சென்று முகம் சுழித்தவாறு கைகுலுக்கி உயர்த்த மறுப்பதை ஒபாமாவிற்குத்தான் இழுக்கு என்று கூறப்படுகின்றது.
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த கால்வின் கூலிட்ஜ் என்பவர் கடந்த 1928 ஆம் ஆண்டு கியூபாவுக்குச் சென்றார்.
 
அவரது வருகைக்கு பின்னர் கடந்த 88 ஆண்டுகளுக்கு கழித்து ஒபாமா இங்கு வந்துள்ளதால் இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.