வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (14:39 IST)

அதிபர்களிடையே முற்றும் வாய்போர்: அமெரிக்காவில் பரபரப்பு!!

அமெரிக்க அதிபர் பதவியில் ஒருவர் ஆட்சி செய்ய மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதாவது, அதிக பட்சமாக இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிப் பெற முடியும்.


 
 
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒபாமா, அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்திருந்தால் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து இருப்பேன் என்று கூறினார். மேலும் அமெரிக்க மக்கள் இன்னும் நம்பிக்கை மற்றும் மாற்றத்துக்கு ஆதரவளிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். 
 
இதனை தொடர்ந்து ஒபாமாவின் கருத்தை டிரம்ப் விமர்சித்துள்ளார். வெற்றி பெற்றிருப்பேன் என்றுதான் ஒபாமா சொல்வார். ஆனால் அவர் என்னிடம் தோற்றுப் போயிருப்பார். வெளி நாடுகளுக்கு செல்லும் வேலைவாய்ப்புகள், ஐஎஸ்ஐஎஸ், ஒபாமா கேர் என பல வகைகளிலும் அவரை மக்கள் புறக்கணித்து இருப்பார்கள் என்று டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.