1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (12:20 IST)

அணு ஆயுதம் முழுவதுமாக ஒழிக்கப்படும் - வட கொரிய அதிபர் கிம் உறுதி

வடகொரியாவில் உள்ள அணுஆயுத கிடங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சந்தித்தனர். 
 
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா என்ற ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில்  பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும், வட கொரியாவில் உள்ள  அணு ஆயுத கிடங்குகள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்தார். மேலும் இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்றும் கிம் கூறினார்.