வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:58 IST)

உலகின் மகிழ்ச்சியான நாடு இதுதான்: இந்தியா லிஸ்ட்லயே இல்ல!!

எஸ்டிஎஸ்என் அமைப்பு சார்பில் 2017-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஆய்வு நடத்தப்பட்டது.


 
 
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற அந்தஸ்தை நார்வே பெற்றுள்ளது. சிரியா, ஏமன் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் சொற்ப அளவிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 
 
பட்டியலில் 155 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
 
தெற்கு சூடான், லைபீரியா, டோகோ, டான்சானியா, புரூண்டி மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் கடை நிலையில் இடம்பிடித்துள்ளன.