செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (23:39 IST)

வெடித்து சிதறிய வெள்ளை மாளிகை: வடகொரியா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை செய்தும், ஏவுகணையும் அனுப்பியும் உலக நாடுகளை பயமுறுத்தி வரும் வடகொரியாவின் கொட்டத்தை அடக்க முடிவு செய்துள்ள அமெரிக்கா தனது கார்ல் வின்சன் போர்க் கப்பலை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பியது. அதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது.



 


இந்த நிலையில் வடகொரியா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அதிபர் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகை வெடித்து சிதறுவது போன்றும் மிச்சிகன் நீர்மூழ்கி கப்பலை தாக்குவது போன்றும், மாதிரி வீடியோ அமைந்துள்ளது. முடிவில் அமெரிக்க கொடி எரிவது போன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் பின்னணியில் ஒரு பெண் குரல் கேட்கிறது. அதில். வடகொரியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தால், அமெரிக்கா இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.