இனி ஏவுகணை சோதனைகள் இல்லை; வடகொரியா வாக்குறுதி; டிரம்ப் அறிவிப்பு

North Korea
Last Updated: ஞாயிறு, 11 மார்ச் 2018 (19:48 IST)
இனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 
வடகொரியா  தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி உலக வல்லரசு நாடுகளை மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பல பகைகளை மறந்து இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார். இந்நிலையில் தற்போது அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என வடகொரியா வாக்குறுதி வாக்குறுதி அளித்துள்ளது என்றும் அந்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன் என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :