செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:12 IST)

15 அதிகாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வடகொரியா

வடகொரிய மூத்த அதிகாரிகள் 15 பேருக்கு அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றியுள்ளது.
 

 
வடகொரியா அதிபர் கிம் ஜாங் தனது ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். உதாரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வனத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வனவியல் வேலைத்திட்டத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 
இதேபோன்று அவ்வாறு நடந்துகொண்ட 2 அமைச்சர்கள் உள்பட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை தென்கொரியா உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.