பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

economics
Last Modified திங்கள், 8 அக்டோபர் 2018 (15:57 IST)
2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசுகள் ஸ்வீடன் நாட்டு அறிஞர் ஆல்ஃபிரட் நோபல் நினைவாக 1895 ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், உயிரியல், அமைதி, இலக்கியம் மற்றும் மருத்துவம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இயற்பியல், வேதியல், மருத்துவம் மற்றும் அமைதிக்கான துறைகளின் சாதனையாளர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வில்லியம் நார்தாஸ்(77) மற்றும் பால் ரோமர்(62) என்ற இரண்டு பொருளாதார நிபுனர்களுக்கு பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய ஆய்வுகளை சம்ர்ப்பித்தற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற இருவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து துறைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இலக்கியத்துக்கான பரிசு மட்டும் அறிவிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :