1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (02:29 IST)

ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி ரீபண்ட் கிடையாது

அமேசான் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பொருட்களுக்கு இனி ரீபண்ட் பாலிசி கிடையாது.

 


 
இணைய வணிக தளத்தில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனம், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களை ரிட்டன் செய்தால் இனி ரீபண்ட் பணம் பெறாமல் அதற்கு பதிலாக வேறு பொருட்களையே பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.
 
பெரும்பாலும் பலர் இணையத்தில் மின் சாதனப் பொருட்களை வாங்கி முப்பது நாட்களுக்குள் பயன்படுத்தி விட்டு பின் பழுதடைந்ததாக திருப்பி கொடுப்பது போன்ற தவறான செயல்களால்  இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
 
இனி அமேசானில், மொபைல் போன், லேப்டாப், டேப்லட், டெஸ்க்டாப் மானிட்டர், கேமரா, கேமரா லென்சுகள் போன்றவற்றினை வாங்குபவர்கள் பழுதடைந்த பொருட்களை திருப்பி கொடுக்கும்போது அவர்களுக்கு பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது, பொருட்கள் மட்டுமே மாற்றித் தரப்படும்.  
 
மேலும், இந்த பாலிசியை அமேசான் மட்டுமில்லமல் பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்  போன்ற வாணிக தளங்களும் இது போன்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.