Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெட்ரோல், டீசல் தேவையில்லை: இனி காருக்கு பீர் போதும்

Last Modified வெள்ளி, 8 டிசம்பர் 2017 (12:50 IST)
கார் உள்பட வாகனங்களுக்கு போடப்படும் எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போவதால் இதற்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பீர் உதவியுடன் காரை இயக்கலாம் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியபோது, பீர் தயாரிக்கும்போது அதில் ஒருசில மூலப்பொருட்களை கலந்தால் பீரில் உள்ள எத்தனால் பியூட்டனலாக மாறும் என்றும், அந்த திரவத்தை காருக்கு பயன்படுத்தும் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும், இது சோதனை முறையில் வெற்றி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்
ஆனாலும் பீரில் உள்ள எத்தனாலை பியூட்டனலாக மாற எடுத்து கொள்ளப்படும் கால அவகாசம் அதிகமாக இருப்பதாகவும், இந்த கால அவகாசத்தை குறைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வெகுவிரைவில் சாலைகளில் பீர் கார் ஓடும் என்பதில் சந்தேகமில்லை


இதில் மேலும் படிக்கவும் :