1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (21:08 IST)

இப்போ இதுதான் புது ட்ரெண்ட்; முதல்நாள் வாங்கிய டிரெஸ் மறுநாளே ரிட்டர்ன்

ஆன்லைனில் புது டிரெஸ் வாங்கி மறுநாளே ரிட்டன் செய்யும் சம்பவங்கள் தற்போது புது ட்ரெண்டாக மாறியுள்ளது.

 
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் பலர் தங்களது புகைப்படங்களை வகைவகையாக அதிகளவில் பதிவிடுவது தற்போது வழக்கமாக உள்ளது.
 
அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர், கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் கண்ணில் படுவதை எல்லாம் படம் பிடித்து பதிவிட்டு வருகின்றனர். அதிக லைக்குகளை பெற புது புது யுத்தியை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது ஒரு நாள் ஒரு உடை என்ற புதிய முறை ட்ரெண்ட் ஆகியுள்ளது. பிரிட்டனின் பார்கேகார்ட்டில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 
 
அதில், புகைப்படம் பிரியர்கள் பத்தில் ஒருபேர் ஆன்லைனில் புதிய துணிகளை வாங்கி, அதனை அணிந்து புகைப்படம் எடுத்து பின்னர் அந்த துணிகளை ரிட்டர்ன் செய்து விடுகின்றனர். 
 
இந்த முறையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதால், அதிக பாலோயர்களை பெறுகின்றனர். இது தற்போது புது ட்ரெண்ட் உருவெடுத்துள்ளது.
 
33 முதல் 45 வயதுள்ள ஆண்கள், பெண்கள்தான் பெரும்பாலும் இந்த வேலையில் அதிகமாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.