1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (14:46 IST)

பூமியை போல் புதிய கோள் கண்டுபிடிப்பு!!

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


 
 
அந்த வகையில் தற்போது பூமியை போல் புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. 
 
கிரகத்திற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது.
 
இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.