1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜனவரி 2016 (19:39 IST)

நேதாஜி மரணம்: புதிய ஆவணத்தை வெளியிட்டது இங்கிலாந்து இணையதளம்

விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் நேதாஜி உயிரிழந்தார் என்று இங்கிலாந்து இணையதளமான www.bosefiles.info வில் இன்று வெளியான ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
 
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
 
இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் www.bosefiles.info என்ற இணையதளம் நேதாஜியின் மரணம் குறித்த பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. இந்த இணையதளத்தை பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த இணையதளம் இன்று வெளியிட்ட ஆவணத்தில் விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் நேதாஜி உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
 
நேதாஜி விமான விபத்தில் தான் உயிரழந்தார் என அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் உறுதி செய்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.